2027 முதல் இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு: அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு! தனியார் முகவர் முறைக்கு முடிவு
2027 முதல் இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு: அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு! கொழும்பு: இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் இலங்கையர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் இலங்கையர்களை இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்துவது அரசுகளுக்கிடையிலான (Government-to-Government – G2G) ஒப்பந்தத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு (SLBFE) அறிவித்துள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகவர் முறை நிறைவடைகிறது தற்போது உரிமம் பெற்ற தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதன்படி, 2027 ஜனவரி 1 முதல் புதிய அரசுகளுக்கிடையிலான ஒப்பந்த முறை அமுலுக்கு வரும். கட்டுமானம், தொழில்துறை, வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் தொடர்பிலும் இந்த மாற்றம் கவனத்தி...